90 களின் பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன்

Published By: Gayathri

19 Aug, 2021 | 09:02 PM
image

குமார் சுகுணா

தனியார் தொலைக்­காட்­சி­ சே­வைகள் தமிழ் மக்­களை ஆக்­கி­ர­மித்­துக்­கொண்­டி­ருந்த 90களில் சின்­னத்­திரை ஊடாக சிறு­வர்கள் தொட்டு இளை­ஞர்கள் முதி­ய­வர்கள் என அனை­வ­ருக்கும் பிடித்த ஒரு பிர­ப­ல­மா­க இருந்­தவர் ஆனந்த கண்ணன். 

நாடகக் கலைஞர், தொலைக்­காட்சி படைப்­பாளர், நடிகர், நாடக இயக்­குநர் என பன்­மு­கங்­களைக் கொண்ட  கலைஞரான இவர் கால­மானார் என்ற செய்தி காது­க­ளுக்கு எட்­டி­யதும் அதிர்­ச்­சியில் பலர் உறை­ந்­தி­ருப்­பர்.

முகம் முழுக்க புன்­ன­கை­யோடும் அழ­கான தமிழ் வர்­ண­னை­யோடும் நிகழ்ச்­சி­களை தொகுத்து வழங்கும் ஆனந்த கண்­ண­னுக்கு மிகப் பெரிய இரசிகர் பட்­டா­ளமே உண்டு. 

சிங்­கப்பூர் தமி­ழ­ரான ஆனந்த கண்ணன் பிர­ப­ல­மான தமிழ் தொலைக்­காட்­சி­களில் பல நிகழ்ச்­சி­களை சிறப்­பாக தொகுத்து வழங்­கி­யுள்ளார்.

குறிப்­பாக சன் மியூ­சிக்கில் தொகுப்­பா­ள­ராக பணி­பு­ரிந்த ஆனந்த கண்ணன் 90 கிட்ஸ்­களின்  விருப்­பத்­துக்­கு­ரிய தொகுப்­பாளர் ஆவார். 

சன் டிவியின் பிர­ப­ல­மான சிந்­துபாத் மெகா தொடரில் முக்­கிய கதா­பாத்­தி­ரத்தில் நடித்­தி­ருந்த ஆனந்த கண்ணன் தமிழ் சினி­மா­விலும் ஒரு சில படங்­களில் நடித்­துள்ளார். 

தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தொகுப்­பாளர் ஆனந்த கண்ணன் சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு தன் குடும்­பத்­திற்­காக மீண்டும் சிங்­கப்பூர் சென்று அங்கு வசித்து வந்தார்.

இளமை காலத்­தி­லேயே நாடகக் கலையில் அதீத நாட்டம் கொண்ட  ஆனந்த கண்ணன் சிங்­கப்­பூரின் ரவீந்­திரன் நாடகக் குழுவில் நடித்து பின்பு உள்ளூர் தொலைக்­காட்சி நாட­கங்­க­ளிலும் நடித்து பிர­ப­ல­மானார். 

பிறகு  ஆனந்­த­கண்ணன் தமி­ழ­கத்தில் வானொ­லியில் படைப்­பா­ள­ராகப் பணி­யாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அதன் பின்னர் 2000களில் அங்கு 'சன் மியூசிக்' தொலைக்­காட்சி நிகழ்ச்­சியில் படைப்­பா­ள­ராகி உலகத் தமிழ் மக்­க­ளி­டையே பிர­ப­ல­மானார்.

பிறகு சன் டிவியில் சிந்­துபாத் என்ற குழந்­தை­களை கவரும் தொட­ரி­ல் நடித்தார். அதன் மூலம் பல சிறார்களையும் அவர் அதிகமாகக் கவர்ந்தார். இத்தனை நாளாய் எங்கிருந்தாய், அதிசய உலகம் 3D போன்ற சில திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

சின்­னத்­தி­ரையில் தொகுப்­பா­ளர்­க­ளாகப் பலர் பணி­யாற்­றி­னாலும், அதில் சிலர் மட்­டுமே சினிமா நட்­சத்­தி­ரங்­க­ளுக்கு இணை­யாகப் புகழ்­பெ­று­கின்­றனர். 

அவர்­களில் ஒரு­வ­ரான ஆனந்த கண்­ண­னுக்கு, சின்­னத்­திரை இரசி­கர்கள் மத்­தியில் அறி­மு­கமே தேவை­யில்லை. சன் டிவியின் நட்­சத்­திரத் தொகுப்­பா­ள­ராகத் திகழ்ந்­தவர். 

இவர் பேட்டி காண்­ப­தாக இருந்தால், உச்ச நட்­சத்­தி­ரங்­கள்­கூட குஷி­யா­வார்கள். பெண் இரசி­கர்கள் படையை அதிகம் கொண்­டி­ருந்த ஆனந்த கண்ணன், புற்­றுநோய் பாதிப்பால் உயி­ரி­ழந்த செய்தி பல­ரையும் அதிர்ச்­சிக்கு உள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது.

புற்­று­நோயால் சிறிது காலம் நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த அவர் கடந்த திங்கட்கிழமை பின்­னி­ரவு இயற்கை எய்­தினார். அவ­ருக்கு வயது 48.

2011 இல் ஊட­கத்தில்  புக­ழுடன் இருந்­த­போதே, தனது பூர்­வீ­க­மான சிங்­கப்­பூரில் குடி­யே­றினார். தமிழ் மொழி மற்றும் கிரா­மி­யக்­க­லை­கள்­மீது அதி­க­மான பற்று கொண்­டவர். 

தான் கற்ற பாரம்­பரிய தமிழ்க் கலை­களை மேடை நாட­கங்கள், தெருக்­கூத்­துகள், கதைகள் வாயி­லாக அந்த நாட்­டி­லுள்ள மாண­வர்கள் மத்­தியில் பிர­ப­லப்­ப­டுத்தும் முயற்­சியில் தீவி­ர­மாகக் கவனம் செலுத்தி வந்தார். 

இந்தநிலையில், கடந்த மூன்று மாதங்­க­ளுக்கு முன்பு ஆனந்த கண்­ணனின் உடல்­நிலை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. பித்­தப்­பையில் புற்­றுநோய் பாதிப்பு ஏற்­பட்­டி­ருந்­ததால், அறுவை சிகிச்­சையின் மூலம் உட­ன­டி­யாக பித்­தப்­பையை நீக்­கி­யுள்­ளனர்.

பிறகு, வீட்டில் ஓய்­வி­லி­ருந்­த­ப­டியே வழக்­க­மான பணி­களைக் கவ­னித்­துள்ளார். ஆனால், சில காலத்­தி­லேயே ஆனந்த கண்­ணனின் உடல்­நி­லையில் மீண்டும் சிக்கல் ஏற்­பட்­டது. 

'கல்­லீ­ர­லிலும் புற்­றுநோய் பரவி, நான்காம் கட்ட நிலையில் இருக்­கி­றது' என்று மருத்­து­வர்கள் அதிர்ச்­சி­யான தக­வலைக் கூறி­யுள்­ளனர். 

தொடர் சிகிச்­சை­களால் உட­ல­ள­விலும் மன­த­ள­விலும் சற்று சோர்­வ­டைந்த ஆனந்த கண்ணன், வீட்­டி­லி­ருந்­த­ப­டியே அவ்­வப்­போது மருத்­து­வ­ம­னைக்குச் சென்று சிகிச்சை பெற்­றுள்ளார்.

அது­வரை குடும்­பத்­தி­னரைத் தவிர யாருக்­குமே ஆனந்த கண்­ணனின் உடல்­நிலை குறித்துத் தகவல் தெரி­விக்­கப்­ப­டாத நிலையில், அவரை உற்­சா­கப்­ப­டுத்த சினிமா, சின்­னத்­திரை மற்றும் பிற துறை­யி­லுள்ள முக்­கி­ய­மான சில நண்­பர்­க­ளுக்கு மட்டும் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்பு தகவல் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவர்கள் ஆனந்த கண்­ண­னுக்கு நம்­பிக்­கை­யூட்­டி­யுள்­ளனர்.

உடல்­நி­லையில் முன்­னேற்றம் ஏற்­பட்டு வந்த நிலையில், திங்கட்கிழைமை இரவு ஆனந்த கண்­ணனின் உடல்­நிலை திடீ­ரென பாதிக்­கப்­பட்­டதால் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்குக்கொண்டு செல்­லப்­பட்டார். 

ஆனால், வரும் வழி­யி­லேயே ஆனந்த கண்­ணனின் உயிர் பிரிந்­து­விட்­ட­தாக மருத்­து­வர்கள் கூறி­யுள்­ளனர். ஆனந்த கண்­ணனின் மரணம், பல­ருக்கும் நம்ப முடி­யாத சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

ஆனந்த கண்­ணனின் மனைவி ராணி, சிங்­கப்­பூரில் பிர­ப­ல­மான தொகுப்­பா­ள­ராக இருந்­தவர். 

கதை சொல்­லி­யான ராணி, ஆனந்த கண்­ண­னுடன் இணைந்து கிரா­மியக் கலை­க­ளையும் பயிற்­று­வித்தார். இவர்­களின் ஒரே மக­ளான அவா கண்ணன் கல்­லூ­ரியில் படிக்­கிறார். 

கிரா­மி­யக்­க­லை­களில் அனு­பவம் பெற்ற மூத்த கலை­ஞர்­களைத் தேடிச்­சென்று அரு­கி­வரும் பல்­வேறு கலை­களைக் கற்­றுக்­கொண்டு, தன் குழு­வி­ன­ருக்கும், பாட­சாலை மாண­வர்­க­ளுக்கும் பயிற்சி அளிப்­பதை வாடிக்­கை­யாகக் கொண்­டி­ருந்தார் ஆனந்த கண்ணன். 

அதற்­காக இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு துடும்பு மற்றும் பறை இசைப் பயிற்­சிக்­காக சென்னை வந்­தி­ருந்­த­வர் ஊட­கங்­க­ளி­டம் கருத்து பகிர்­கையில் , கிரா­மியக் கலை­ஞ­னா­கவே மாறிப்­போன உணர்வில் சிலா­கித்துப் பேசினார்.

`சிங்­கப்­பூர்ல மலாய், தமிழ், சைனீஸ், ஆங்­கி­லம்னு நாலு தேசிய மொழிகள் இருக்கு. இங்க ஆறு சத­வி­கி­தத்­தினர் மட்­டுமே தமி­ழர்கள். ஒவ்­வொரு பள்ளி வகுப்­ப­றை­யி­லயும் சரா­ச­ரியா 2 - 3 மாண­வர்கள் மட்­டுமே தமி­ழர்கள். 

தமி­ழுக்குத் தொடர்ந்து உயி­ரூட்­ட­லைன்னா, அடுத்த சில தலை­மு­றை­கள்ல இந்த நாட்­டுல தமிழ் பேசு­ற­வங்க எண்­ணிக்­கையும் தமிழ் பாரம்­பரியமும் இல்­லாமல் போகவும் வாய்ப்­பி­ருக்கு. 

அத­னால், தமிழர் என்­கிற அடை­யா­ளத்தைத் தக்­க­வெச்­சுக்க வேண்­டிய கட்­டா­யமும் பொறுப்பும் எங்­க­ளுக்கு இருக்கு. 

அதுக்­கா­கத்தான் பல சிர­மங்­க­ளையும் கடந்து கிரா­மி­யக்­க­லை­களைப் பரப்பும் முயற்­சியை செய்­திட்­டி­ருக்கோம்” என்று பெரு­மி­தத்­துடன் கூறி­யவர், இது­வரை 40,000-க்கும் மேற்­பட்ட மாண­வர்­க­ளுக்குப் பயிற்சி கொடுத்­தி­ருக்­கிறார்.

அவ­ரது ­நண்­பர்கள் தெரி­வித்­த­தா­வது

“எனக்கு என்ன ஆனாலும் கிரா­மி­யக்­க­லை­களைப் பரப்பும் நம்ம வேலைகள் தொடர்ந்து நடக்­க­ணும்”னு சொல்­லி­யி­ருந்தார். அத­னால, அவ­ருக்­கான சிகிச்­சைகள் ஒரு­பக்கம் போயிட்­டி­ருந்­தாலும், தொடர்ந்து பயிற்சி வேலைகள் தடை­யில்­லாம நடந்­துட்­டி­ருந்­துச்சு. நண்­பர்கள் பலரும் போன்ல, வீடி­யோ­கால்ல அவ­ருக்கு நம்­பிக்கை கொடுத்­தாங்க. 

கொரோனா சிக்­க­லால, அந்த நேரத்­துல பக்­கத்­துல இருந்து அவ­ருக்கு நம்­பிக்­கை­யூட்­டவும், இப்போ அவ­ருக்கு நேர்ல அஞ்­சலி செலுத்­தவும் பல­ருக்கும் வாய்ப்பு அமை­யல. 

கண்ணை மூடி திறப்­ப­தற்குள் நடந்­த­து­போல மூணே மாதங்­கள்ல எல்­லாமே முடிஞ்­சு­டுச்சு. ஆனந்த கண்­ண­னோட இழப்பை ஏத்­துக்க கஷ்­டமா இருக்கு. 

அவ­ரோட குடும்­பத்­தி­னரும், குழு­வி­னரும் ஆனந்த கண்­ணனின் கன­வு­களை நிறை­வேற்ற நிச்­ச­யமா உழைப்­பாங்க” என்று கவ­லை­யுடன் முடித்­தனர்.

மர­புக்­க­லை­களை வளர்க்கும் கலை­ஞ­ராக குறிப்­பாக சிங்­கப்­பூரில் வில்­லுப்­பாட்டு, பொய்க்கால் குதிரை, மயி­லாட்டம் போன்ற பாரம்­ப­ரிய கிரா­மிய கலை­களை வளர்ப்­பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார் ஆனந்த கண்ணன்.

கூத்­துப்­பட்­டறை ந.முத்­து­சாமியின் மாணவர். தேசியக் கலைகள் மன்­றத்தின் ஆத­ரவில் இந்­தி­யா­வுக்குச் சென்று மர­புக்­கலை பயின்­றவர். பல மேடை நாட­கங்­களை எழு­தியும் இயக்­கியும் உள்ளார்.

அவர் நிறு­விய ஏ.கே.தியேட்டர் (AK Theatre) நாடகக் குழுவின் மூலம், நாடகக் கலை­யையும் தமிழ் மொழி­யையும் மாண­வர்­க­ளிடம் எளி­மை­யான முறையில் கொண்டு சேர்க்க பல முயற்­சி­களை மேற்­கொண்டார்.

மாலை மதுரம், காண்போம் கற்போம், அமளி துமளி, ஊர்க்குருவி, சூப்பர்ஸ்டார் சேலஞ், சவால் சிங்கப்பூர், சுவை போன்ற பல உள்ளூர் நிகழ்ச்சிகள்  ஆனந்த கண்ணன் படைத்த, நடித்தவை. 

சிங்கப்பூரில் 2018ஆம் ஆண்டின் பிரதான விழாவில் அவர் தொகுத்து வழங்கிய ஊர்க்குருவி நிகழ்ச்சிக்காக சிறந்த படைப்பாளர் விருதைப் பெற்றார்.

பல தசாப்­தங்­க­ளாக  தமிழ்க்கலை உலகில் தமது நடிப்பு, படைப்பாற்றல் திறன்களாலும் தமிழ் மொழி, தமிழ் மரபுக்கலை மீதுள்ள வேட்கையாலும் பலரது மனங்களைக் கொள்ளை கொண்டவர்  ஆனந்த கண்ணன்.  அவ­ரது மறைவு கலை உல­­குக்கு ஈடு­செய்ய முடி­யா­த­­துதான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22