அத்தியாவசிய சேவைகள் செயலிழந்தால் மக்களுக்கு வாழமுடியாத நிலை ஏற்படும்: பந்துல

By J.G.Stephan

19 Aug, 2021 | 05:22 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)
சுய கட்டுப்பாட்டுக்கு செல்வதன் மூலம் கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுதிக்கொள்ளலாம். ஆனால் அத்தியாவசிய சேவைகள் ஸ்தம்பித்தால், மக்களுக்கு வாழமுடியாத நிலை ஏற்படும் என்பதை கருத்திற்கொண்டே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

வர்த்தக அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் நாளுக்கு நாள் கொவிட் தொற்றாளர்கள்  அதிகரித்து வருவதன் மூலம் கொவிட் தொற்று மிகவும் வேகமாக பரவிச்செல்வதை உணர்ந்துகொள்ள முடிகின்றது. இந்நிலைமையை கட்டுப்படுத்த சுகாதார தரப்பினருடன் இணைந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. மக்களும் இதுதொடர்பாக புரிந்துகொண்டு தமது அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீடுகளில் இருந்து வெளியில் செல்லவேண்டும்.

மேலும், கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு நாட்டை முழுமையாக மூடிவிடுவதாலும் மக்கள் அவர்களது அத்தியாவசிய தேவைகளுக்காக கஷ்டப்படவேண்டிய நிலை ஏற்படுகின்றது. சுய கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருப்பதன் மூலம் கொவிட்டை கட்டுப்படுத்தலாம். ஆனால் அத்தியாவசிய சேவைகள் இயங்காவிட்டால் மக்களுக்கு வாழமுடியாத நிலைமை ஏற்படும் என்பதை நாங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

குறிப்பாக சுகாதார சேவைகள், நீர், மின்சார சேவைகள் இடம்பெறவேண்டும். அதேபோன்று மக்களுக்கு தேவையான ஆகார வசதிகளை மேற்கொள்ளப்படவேண்டும். முழு நாட்டையும் முடக்கினால் எவ்வாறு இதனை முன்னுக்குகொண்டு செல்வது. அதனால் அரசாங்கம் தற்போதைய நிலைமைக்கு ஏற்றவகையில் சுகாதார கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றது. எதிர்காலத்தில் நாட்டை முடக்கவேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவும் அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right