கிளிநொச்சியில் மிக இரகசியமாக காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் திறப்பு

Published By: Digital Desk 4

19 Aug, 2021 | 04:01 PM
image

கிளிநொச்சியில்  மிக மிக இரகசியமாக காணாமல் போனவர்கள் தொடர்பான  அலுவலகம் (OMP) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகம்  கடந்த 12.08.2021 அன்று காலை  அலுவலக அதிகாரிகளின் பங்குபற்றலுடன் மிகவும் இரகசியமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வெளிப்புறத்தில் எவ்வித பெயர் பலகையும் பொருத்தாது அலுவலகத்தின் உள்ளே காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் என கடதாசியில் பிரதி  எடுக்கப்பட்டு ஒட்டப்பட்டு அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருக்கில் மாவட்டச் செயலக  பயிற்சி  நிலையம் அமைந்துள்ள காணியில் உள்ள பெண் தலைமைதாங்கும், மற்றும் கணவனை இழந்த பெண்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிலைய அலுவலகத்தின் ஒரு பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான  குறித்த (OMP)  அலுவலகம் இயங்கி வருகிறது.

இவ்வலுவலகத்தில் சுமார்  நான்கு உத்தியோகத்தர்கள் பணியாற்றுவதாகவும், கடமைகளுக்காக இருவர் சுழற்சி முறையில்  வந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 இவ்வலுவலகம் திறந்தவிடயம் தொடர்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பின் செயலாளர் ஆ. லீலாதேவியுடன் தொடர்பு கொண்டு வினவிய போது இது பற்றிய எவ்வித தகவல்களுக்கும்  தமக்கு தெரியாது என்றும்,  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கே தெரியாது  என்ன நோக்கத்திற்காக கிளிநொச்சியில்  OMP அலுவலகம் திறக்கபட்டது என தமக்குத் தெரியாது  என்றும் அவர்  குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரனிடம் வினவிய போது, காணாமல் போன ஆட்கள் பற்றிய  அலுவலகம் தலைமை காரியாலயம் மாவட்டச் செயலகத்திடம்  தங்களுடைய அலுவலகத்தின் செயற்பாடுகளை கிளிநொச்சி ஆரம்பிப்பதற்கு இடம் ஒன்றை கோரியிருந்தார்கள் அதற்கமைவாக மேற்படி இடத்தை நாம் வழங்கினோம். அங்கு அவர்கள் தங்களுடைய செயற்பாடுகளை ஆரம்பித்திருகின்றார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். நாவாந்துறையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்...

2024-04-15 07:43:44
news-image

இன்றைய வானிலை

2024-04-15 06:18:46
news-image

நுவரெலியா - மீபிலிபான இளைஞர் அமைப்பின்...

2024-04-15 03:09:11
news-image

தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டில் ‘இனப்படுகொலையின்’...

2024-04-15 02:53:31
news-image

வயிற்றுவலி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்ட இளம்...

2024-04-15 00:26:54
news-image

பொது வேட்பாளர் விடையத்தை குழப்ப பலர்...

2024-04-14 23:04:21
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : கறுப்பு...

2024-04-14 20:56:22
news-image

பலாங்கொடையில் இளைஞர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை!

2024-04-14 19:44:28
news-image

வெளி மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்காக...

2024-04-14 18:31:44
news-image

நாட்டில் பல இடங்களில் இடியுடன் கூடிய...

2024-04-14 17:58:50
news-image

புதுவருட தினத்தில் காணாமல்போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

2024-04-14 17:45:32
news-image

தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு...

2024-04-14 15:05:29