பாகிஸ்தானின் மத்திய பகுதியில் ஷியா முஸ்லிம்கள் வியாழக்கிழமை முன்னெடுத்த ஊர்வலத்தின்போது சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் குறைந்தது 30 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களிடையே இறப்புகள் குறித்து உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

குண்டுவெடிப்பு நடந்த இடத்தை நோக்கி பொலிஸ்  மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து செல்வதை சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளிகள்  வெளிக்காட்டின.

தாக்குதல் நடந்த கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில், பஹவல்நகரில் உள்ள பழமைவாத நகரத்தில் பல காயமடைந்த மக்கள் உதவிக்காக காத்திருந்தனர்.

ஒரு ஷியா தலைவர் குண்டுவெடிப்பை உறுதிப்படுத்தினார், ஆனால் மேலதிக விவரங்களை அவர் வெளியிடவில்லை.