அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள் குறைந்தது மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.

குறைந்தபட்டம் மூன்று வாரங்களகுக்கு நாட்டை முடக்காமல் கொரோனா நோயாளின் எண்ணிக்கையை வைத்தியசாலைகளினால் தாங்க முடியும் அளவிற்கு குறைக்க முடியாது என்று நம்புவதாகவும் அவர்கள் அந் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நமது இடசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண, ஜாதிக நிதாஸ் பெரமுனவின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய தேசிய மக்கள் கட்சியன் தலைவர் திரான் அலஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டாக்டர்  ஜி.வீரசிங்க, இலங்கை மக்கள் கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன மற்றும் கடமைகளுக்கான தேசிய அமைப்பின் தலைவர் தலைவர் கெவிது குமாரங்க மற்றும் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.