கடந்த சில நாட்களின் முன்னர் கைப்பற்றப்பட்ட போலி இலக்கத் தகட்டுட்டுடனான இரு  கார்களில் மற்றொரு கார் இன்று(19.08.2021) காலை தம்புள்ளையில் கைப்பற்றப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.

கடந்த 16ம் திகதி காத்தான்குடி பொலிஸ் பிரிவில் போலி இலக்கத்தகட்டுடான கார் ஒன்றை காத்தான்குடி பொலிசார் கைப்பற்றியபோது அதே இலக்கத்தில் மற்றொரு கார் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உண்மையான இலக்கத்தகட்டின் மேல் போலியான முறையில் ஸ்ரிக்கர் வடிவில் இலக்கத்தகட்டை அமைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த போலி இலக்கத் தகட்டுடைய காரைத் பொலிசார் தேடியிருந்த நிலையில் இன்று காலை தம்புள்ளையில் வைத்து, குறித்தக் கார் கைப்பற்றப்பட்டுள்ளது.

முன்னர் கைப்பற்றப்பட்ட கார் மட்டக்களப்பு நீதிமன்றத்தில்  ஆஜர் படுத்தப்பட்டுள்ள நிலையில்  இன்று கைப்பற்றப்பட்ட காரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.