இலங்கை, பங்களாதேஷ், எகிப்து, இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான நேரடி வர்த்தக விமான சேவைகளை மீண்டும் தொடங்க குவைத் அமைச்சரவை நேற்று முடிவு செய்தது.

கொரோனா வைரஸ் அவசரக் குழு விதித்த விதிமுறைகளுக்கு இணங்க இந்த முடிவு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக குவைத் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தாரெக் அல்-மஸ்ரெம் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் குவைத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக பல நாடுகளுக்கான விமானங்கள் சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டன.