உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கட்டாயப்படுத்தி பாலியல் வைத்துக் கொண்டதாக பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னை மிரட்டி பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், மேலும் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும் 23 வயதுடை பெண் மீது 16 வயது இளைஞர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யதுள்ளார்.

இதையடுத்து குறித்த பெண்ணின் மீது பாலியல் துஷ்பிரயோகம், கொலை செய்து விடுவதாக மிரட்டுவது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

''குற்றம் சுமத்தப்பட்ட பெண் கடந்த சில நாட்களாக வீடியோ ஒன்று வைத்துக் கொண்டு, அந்த இளைஞரை மிரட்டி பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார். 

மேலும், திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி வந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.