உலக நாடுகளை உலுக்கி வரும் வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்து,  ஆண்டுகள் கடந்தாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ள நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.01 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.82 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதுடன்,  வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 44.05 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1.74 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருதோடு, சிகிச்சை பெறுபவர்களில் 1.07 இலட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.