கிளிநொச்சியில் புதையல் தோண்ட முற்பட்ட நால்வர் கைது

By T Yuwaraj

19 Aug, 2021 | 09:54 AM
image

கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அழகாபுரி பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் வவுனியாவைச் சேர்ந்த இருவர், யாழ்ப்பாணம், விசுவமடுப் பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவர் என்று தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து புதையல் இருப்பதைக் கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனர் கருவி ஒன்றும்  கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். கைதானவர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

75 ஆவது சுதந்திர தினம் கரிநாளாக...

2023-01-28 16:41:56
news-image

இன்று நாட்டின் சில பகுதிகளில் மழை...

2023-01-29 10:23:51
news-image

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைகள் ஆரம்பம்

2023-01-29 09:29:47
news-image

சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்கள் பொருளாதார...

2023-01-28 13:02:13
news-image

தேர்தல் இடம்பெறுமா ? இல்லையா ?...

2023-01-28 12:59:57
news-image

வடக்கில் இராணுவ வசமுள்ள 100 ஏக்கர்...

2023-01-28 13:55:10
news-image

கிண்ணியாவில் புதையல் தோண்ட வேனில் பயணித்த...

2023-01-28 12:37:27
news-image

பொருளாதார நெருக்கடி வெகுவிரைவில் எரிமலை போல்...

2023-01-28 11:31:02
news-image

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி...

2023-01-28 15:35:58
news-image

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும்...

2023-01-28 15:13:05
news-image

தேர்தல் ஆணைக்குழுவின் மற்றொரு உறுப்பினரையும் பதவி...

2023-01-29 09:26:07
news-image

காணி தகராறு ; இருவர் கொலை

2023-01-28 13:55:45