நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மேலும் 170 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இன்றைய தினம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 6,604 யும் கடந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை முன்னதாக 2,428 புதிய கொரோனா தொற்றாளர்கள் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை  3,68,111 ஆக அதிகரித்துள்ளது.