மாகாணங்களுக்கு இடையில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால், இன்று முதல் தினமும் 82 ரயில் சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி பிரதான ரயில் வழியாக 30 ரயில்கள், கடலோரப் பாதையில் 30 ரயில்கள் மற்றும் களனி பள்ளத்தாக்கு வழியில் எட்டு ரயில்கள் மாத்திரம் இயக்கப்படும் என்று கூறினார்.