(செய்திப்பிரிவு)
இலங்கை நீதிபதிகளின் நிறுவன மாநாடு நீதித்துறை சுதந்திரத்திற்கான '20 ஆவது திருத்தத்தின் விளைவாக மேற்கொள்ளப்பட்டுள்ள மக்கள் இறையாண்மை மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவற்றிற்கு  சவால் விடும் சகல விடயங்களுக்கும் எதிராக முன் நிற்போம் என்பதில் உறுதியாக உள்ளோம் என்பதோடு இவற்றை பாதுகாப்பதற்காக முன்னிலை வகிக்க ஒருபோதும் தயங்க மாட்டோம். என எதிர்ககட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கொவிட்-19 தொற்றுநோயை  எதிர்கொண்டுள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய நீதித்துறை நடவடிக்கை குறித்து கடந்த வாரம் இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தில் நடைபெற்ற மாநாடு குறித்து சர்ச்சைக்குரிய சமூக உரையாடல் தற்போது உருவாகியுள்ளன.

நீதித்துறை சேவை ஆணைக்குழு அரசியலமைப்பில் உள்ள ஒரு சுயாதீன அமைப்பாக இருந்தாலும் அதன் சுதந்திரத்தை பாதிக்கும் பல விவகாரங்கள்  இந்த மாநாட்டு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. நீதித்துறை சேவை ஆணைக்குழு பல்வேறு நீதிமன்றங்களில் இருந்து நீதிபதிகளை அழைத்து போராட்டங்களை நடத்துவது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை பிறப்பிக்கும் மற்றும் நீதி நிர்வாகம் தொடர்பான  வழிமுறைகளை வெளியிடுவது நீதித்துறையின் சுதந்திரத்தை மோசமாக பாதிக்கும். இதே போல் மாநாட்டில்  கலந்து கொள்ளத் தவறினால் பதவி உயர்வு ,சம்பள உயர்வு ,வெளிநாட்டுப் பயிற்சிக்கு அனுப்புதல் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நியமனங்கள் ஆகியவை  அவதானிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இது நீதித்துறை ஆணைக்குழுவின் சுயாதீனத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இது ஒரு வகையான  கடுமையான எச்சரிக்கையாக  அமைவதோடு தேவைக்கேற்ப நீதித்துறையை கையாள அரசாங்கம்  அல்லது நிறைவேற்றுத்துறையின்  நலன் கருதி இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய தேவையற்ற செல்வாக்கு வழங்கப்பட்டு, உண்மைகள் மற்றும் நீதிபதிகளின் விருப்பப்படி வழங்கப்பட வேண்டிய நீதி ஆகியவற்றில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாக மாறிவிடும்.

இத்தகைய தேவையற்ற செல்வாக்கு சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தில் 20 வது திருத்தத்தின் தாக்கத்தின் மீதான பொது மக்கள் சந்தேகத்தை மேலும் அதிகரிக்கும். உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை இடமாற்ற மேற்கொள்ளும் அதிகாரம் , நீதிமன்ற நிர்வக அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் , பதவி உயர்வு ,சேவை தரம் கீழ் நிலைப்படுத்தல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை அதிகாரம் பெற்ற நீதித்துறை சேவை ஆணைக்குழுவிற்கு , நீதிமன்றங்களில் நீதி நிர்வாகம் குறித்த பரிந்துரைகள், உத்தரவுகள் அல்லது ஆலோசனைகளை வழங்க அதிகாரம் இல்லை என்பதை குறிப்பிட வேண்டும் என்றார்.