பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை தொடர்பில் மேலுமொருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இன்று (09) பிறப்பித்துள்ளார்.

குறித்த நபரை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை தொடர்பில் இதுவரையில் 8 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.