கேரளாவில் உள்ள இணையதளம் ஒன்றின் மூலம் கடந்த ஒரு ஆண்டில் மாத்திரம் விபசாரத்திற்காக 60 பெண்களை பக்ரைன் நாட்டிற்கு கடத்தியதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

இந்த பெண்கள் குடியேற்ற அதிகாரிகளின் உடந்தையுடனே நாடு கடத்தப்பட்டுள்ளன.

தம்மிடம் நல்ல வேலை ஒன்று இருப்பதாகவும் கவர்ச்சிகரமான சம்பளம் கிடைக்குமெனவும் ஆசை வார்த்தைகள் கூறி இந்த பெண்கள் அரபு நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

தற்போது இந்த பெண்கள் பக்ரைனில் முக்கிய குற்றவாளியான முஜீப் மற்றும் முகமது பஷீர் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அந்நாட்டு பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இணையதளம் மூலம் விபசாரம் நடத்தி வந்த அன்பு முத்தம் (கிஸ் ஆப் லவ்) பிரச்சார ஒருங்கிணைப்பாளர் ராகுல் பசுபாலன், அவரது மனைவியும், மொடல் அழகியுமான ரேஷ்மி நாயர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டதையடுத்தே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.