ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் புதன்கிழமை தேசியக் கொடியினை ஏந்தி முன்னெடுக்கப்பட்ட மக்கள் பேரணியில் தலிபான்களால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்ததாக அந் நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிபடுத்தியுள்ளன. 

ஆகஸ்ட் 15 அன்று, தலிபான்கள் காபூலுக்குள் நுழைந்து ஆப்கனிஸ்தானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததைத் தொடர்ந்து பல நாடுகள் ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் இராஜதந்திர பணியாளர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளனர்.

ஆப்கானை விட்டு வெளியேறுவதற்காக சமீபத்திய நாட்களில், ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூலில் உள்ள விமான நிலையத்தை முற்றுகையிட்டு வெளியேறும் விமானங்களை நாடி வருகின்றனர்.