(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்றுக்குள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை நடபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

'இலங்கையில் புகழ் பெற்ற வெகுசன ஊடக அமைச்சராக செயற்பட்டுள்ள மங்கள சமவீர கொவிட் தொற்றுக்குள்ளாகி தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார். நாமனைவரும் ஒரு மனதுடன் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்போம்.' என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தார்.

இன்றைய தினம் முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பின்னர் அவர் இறந்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.