மனிதக்கொலை தொடர்பில் குற்றச்சாட்டப்பட்ட மூவருக்கு நுவரெலியா மேல்  நீதிமன்றம் இன்று (09) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த உத்தரவினை நுவரெலியா மெல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க பிறப்பித்துள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு தலவாக்கலை டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரை வெட்டிக்கொலை செய்தமை தொடர்பில் குறித்த மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.