புத்தளம் குருநாகல் வீதியில் கொட்டுக்கச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள குளத்திற்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கார் ஒன்று விபத்திற்குள்ளாகியதில்  வைத்தியர் ஒருவர் படு காயமடைந்து புத்தளம்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.  

புத்தளம் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு காயத்திற்குள்ளானதோடு அவர் உயிர் தப்பியது அதிசயமானது என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

குருநாகல் திசையிலிருந்து வந்துள்ள குறித்த வைத்தியர் பயணித்த கார் கொட்டுக்கச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள குளத்தினைக் கடந்த போது அவ்விடத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தூணில் மோதி இழுபட்டுச் சென்று எதிரே இருந்த கால்வாய் ஒன்றின் மீதும் அவ்விடத்திலிருந்து மரம் ஒன்றிலும் மோதி வீடொன்றின் அருகில் சென்று நின்றுள்ளது. 

இவ்விபத்தில் குறித்த கார் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.