எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் அரசாங்கம் நாட்டை முடக்குவதற்கான தீர்மானங்களை எடுக்காவிட்டால், ஒரு தலைபட்சமாக நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று பொது, தனியார் மற்றும் பெருந்தோட்டத் துறைகளை உள்ளடங்கிய தொழிற்சங்க கூட்டணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீர்மானத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் தயாராக இருப்பதாகவும் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.
அதேநேரம் கொவிட்-19 நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கான தொழிற்சங்க கூட்டணியினால் ஒரு 10 அம்சக் கோரிக்கையொன்றும் முன் வைக்கப்பட்டுள்ளது.
1. பத்து நாட்களுக்கு நாட்டை முடக்குதல்
2. இந்த காலகட்டத்தில் கொவிட் -19 சோதனைகளை அதிகரித்தல்
3. பாதிக்கப்பட்டவர்களை வேறுபடுத்தவும் சிறிய அறிகுறிளை வெளிப்படுத்துவோறுக்கு வீட்டில் சிகிச்சை அளித்தல்
4. குறைந்தபட்சம் 100,000 படுக்கைகளுடன் இடைநிலை பராமரிப்பு மையங்களைத் தயார் செய்யவும்
5. அத்தியாவசிய சிகிச்சைக்காக 10,000 படுக்கைகளை ஒதுக்குங்கள்
6. அறிவியல் கண்காணிப்பின் மூலம் நோயின் போக்கை துல்லியமாக கணிக்கத் திட்டமிடுங்கள்
7. இந்த தருணத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதை தவிர்க்கவும்.
8. நாட்டிற்குள் நுழையும் குடியேறிகள் தொடர்பலான அவதானம்
9. நாட்டில் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பச்சை, செம்மஞ்சள் மற்றும் சிவப்பு வலயங்களாக பகுதிகளை வகைப்படுத்தல்.
10. முடக்கலின் போது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM