ரியோவில் இடம்பெற்றுவரும் பரா ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப்பட்டியலில் சீனா முதலிடம் பெற்றுள்ளது.

இதனடிப்படையில் சீனா 7 தங்கம் 9 வெள்ளி 4 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் பிரிட்டன் 5 தங்கம் 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 11 பதக்கங்களை கைப்பற்றியதுடன், மூன்றாவது இடத்தில் உஸ்பெகிஸ்தான் 3 தங்கம் 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் அடங்கலாக 8 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் ரியோ ஒலிம்பிக்கில் முதலிடம் பிடித்த அமெரிக்கா 2 தங்கம் 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என 8 பதக்கங்களை பெற்று நான்காவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.