'மாஸ்டர்' பட புகழ் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு 'அர்த்தம்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குனர் மணிகாந்த் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'அர்த்தம்'. இதில் மாஸ்டர் மகேந்திரன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா தாஸ் நடிக்கிறார். கன்னடம் மற்றும் தெலுங்கில் பிரபலமான இவர் தமிழில் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். 

இவர்களுடன் நடிகர்கள் நந்தா துரைராஜ், அஜய், நடிகைகள் ஆமனி, சஹிதி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பவன் சென்னா ஒளிப்பதிவு செய்து செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசை அமைத்திருக்கிறார். மினர்வா மூவி மேக்கர்ஸ் மற்றும் ஸ்ரீ வாசவி  மூவி புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் ராதிகா ஸ்ரீநிவாஸ் மற்றும் ரித்விக் வத்ஸா தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது. 

இதனைத்தொடர்ந்து படத்திற்கு 'அர்த்தம்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் வெளியாகியிருக்கிறது. விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.