கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று(17) கொரோனா தொற்றுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கிண்ணியா மாலிந்துரை கிராமத்தை சேர்ந்தவர் எனவும் ஏற்கனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம். றிஸ்வி குறிப்பிட்டார்.
அதனடிப்படையில் இதுவரை கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொவிட் 19 தொற்றுடன் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று(17) ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய உறவினர்களிடம் இருந்து பெறப்பட்ட 21 அன்டிஜன் பரிசோதனை முடிவுகளின் படி ஒரே குடும்பத்தை சேர்ந்த 06 நபர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறித்த தொற்றாளர்கள் மாஞ்சோலைச்சேனை கிராமத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி இரண்டாவது அலையின் பின்னர் இதுவரைக்கும் 500 தொற்றாளர்கள் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கிண்ணியாவில் கொவிட் 19 தொற்றுக்கள் பரவுவதை தடுக்கும் நோக்கில் இன்று கொவிட் செயலனி கூட்டம் கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் நாளை முதல் கிண்ணியா பிரதேச மற்றும் நகரசபை எல்லைப்பகுதிகளில் உள்ள அத்தியவசியத் தேவையான மரக்கரி, மீன், இறைச்சி பலசரக்கு கடைகள், பேக்கரி, மருந்தகம் தவிர ஏனைய அனைத்து கடைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி குறிபிபட்டார்.
எனவே மக்கள் மிக்க அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் சுகாதார நடைமுறைகளை பேணி அத்தியவசியத் தேவைகளுக்கு மாத்திரம் வெளியில் செல்லுமாறும் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். றிஸ்வி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM