(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த சிறுமி ஒருவர், ஆவி பிடிக்க முற்பட்ட போது வெந்நீர் உடலில் கொட்டியதால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஆணமடுவ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

பத்து வயதான குறித்த சிறுமிக்கும், அவரது தாயாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்விருவரும் அவர்களது வீட்டிலேயே தடுத்து வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று, அச்சிறுமிக்கு ஆவி பிடிப்பதற்காக வெந்நீர் வழங்கப்பட்டுள்ளது. சிறுமி ஆவி பிடிக்க முற்பட்ட போது அந்த வெந்நீர் உடலில் கோட்டியதால் காயம் ஏர்பட்டுள்ளது.

இந்நிலையில்  உடனடியாக சிறுமி, உரிய சுகாதார வழிகாட்டல்களின் கிழ், ஆணமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. 

சிறுமியின் நிலை கவலைக் கிடமாக இல்லை எனவும், அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆணமடுவ வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கூறினார்.