(இராஜதுரை ஹஷான்)
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கு மேலதிகமாக வழங்கப்பட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சுக்குரிய விடயதானங்களை உள்ளடக்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி ஆணைக்குழு, கொவிட் -19 வைரஸ் தடுப்பு ஜனாதிபதி செயலணி உள்ளிட்ட பிரதான ஜனாதிபதி செயலணிகள், நிதி மூலதனச்சந்தை, இராஜாங்க அமைச்சுக்குரிய விடயதானங்களில் உள்ளடங்கும் திணைக்கங்கள் மற்றும் நிறுவனங்களை மேற்பார்வை செய்தல் மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்களை துரிதப்படுத்தல், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் வெளிவிவகாரம், கல்வி, போக்குவரத்து, சுகாதாரம், மின்சாரத்துறை, ஊடகத்துறை உள்ளிட்ட பிரதான அமைச்சுக்கள் ஜனாதிபதியினால் நேற்று மறுசீரமைக்கப்பட்டன. அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. மாறாக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை என்ற புதிய அமைச்சு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.
நிதி மூலதனச்சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி சீர்திருத்தம் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாரட் கப்ராலுக்குரிய பல விடயதானங்கள் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலணி - மேற்பார்வை
இலங்கை முதலீட்டு சபை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, ஜனாதிபதி செயலணி, முப்படைகளுக்கிடையில் கொவிட் தொற்று பரவாமலிருத்தலை தடுத்தல்,கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, கிழக்கு மாகாண தொல்பொருள் ஆய்வு ஜனாதிபதி செயலணி,பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, காலநிலை மாற்றத்திற்கான நிலையான தீர்வுகளுடனான பசுமையான இலங்கை இலக்கை அடையும் ஜனாதிபதி செயலணி, அபிவிருத்தி முன்னரிமைகள், சுயதொழில் மற்றும் புவியியல் வளங்கள் மற்றும் பாரம்பரிய தொழில் முனைவோர் மேம்பாட்டு ஜனாதிபதி செயலணி,தேசிய வரிசைப்படுத்தல் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஆகியவற்றை மேற்பார்வை செய்தல்,
மேற்பார்வை செய்யப்படும் திணைக்களங்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள்.
பொது திறைசேரி, நிதி கொள்கை துறை, தேசிய வரவு- செலவு துறை, மேலாண்மை சேவைகள் மற்றும் வேறு வளங்கள் துறை மற்றும் பொது நிதித்துறை ஆகிய நிறுவனங்கள் , திறைசேரி செயற்பாடுகள், அரச கணக்கு துறை, வர்த்தகம் மற்றும் கொள்கைகள், தகவல் மேலாண்மை, சட்டத்துறை மேலாண்மை, அபிவிருத்தி நிதி நிறுவனம்,
அரச வருவாய் மேலாண்மை.- மேற்பார்வை
உள்நாட்டு வருமானத்துறை, இலங்கை சுங்கம், மதுவரி திணைக்களம், தேசிய லொத்தர் சபை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடு.
வங்கி நிதி மற்றும் மூலதனச்சந்தை கொள்கைகள் மற்றும் ஒழுங்கு முறைமை அமைப்பு _ மேற்பார்வை.
இலங்கை மத்திய வங்கி, அனைத்து அரச வங்கிகள், நிதி காப்பீடு மற்றும் நிதி நிறுவனங்கள், காப்புறுதி திணைக்களம், இலங்கை பத்திரங்கள் பரிவர்தனை நிறுவனம், இலங்கை ஏற்றுமதி கடன் கழகம்,
நிதி மேலாண்மை
லேடி லோச்செர், வேலை நிறுத்தம், கலவரம், உள்நாட்டு கலவரம், மற்றும் பயங்கரவாதம் தொடர்பான நிதியம், தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதி, ஊழியர் அறக்கட்டளை நிதியம், தேசிய சுகாதார மேம்பாட்டு நிதி, சிறுநீரக நிதி,தேயிலை சக்தி நிதி,
கிராமத்துடனான உரையாடல் செயற்திட்டத்திற்கமைய மக்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கும் ஆலோசனைகளை மற்றும் தீர்மானங்களை விரைவாக செயற்படுத்துவதற்காக மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் ஏனைய நிறுவனங்களின் பிரதானிகள் ஆகியோரை மேற்பார்வை செய்தல்.
அனைத்து கிராமங்களையும் ஒன்றினைக்கும் வகையில் உருவாக்கியுள்ள கிரம அதிகாரிகள், அபிவிருத்தி அதிகாரிகள்( பொதுத்துறை நிர்வாக இராஜாங்க அமைச்சு) , விவசாய பரிசோதனை உதவியாளர்( விவசாயத்துறை சேவை திணைக்களம்), சமுர்த்தி அபிவிருத்தி மேற்பார்வையாளர் மற்றும் அதிகாரிகள்(சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்), குடும்ப சுகாதார சேவையாளர்( சுகாதார திணைக்களம்), சிறுவர் பாதுகாப்பு கிராமிய குழு,தங்குமிட மட்டத்திலான செயற்திட்டங்கள், தொழினுட்பம் மற்றும் ஆலோசனை சேவை வழங்கலுக்காக ஒன்றினைந்து செயற்படல்,
பிரதேச சபை மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் 2021 தொடக்கம் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வரைபுக்கமைய அரச நிறுவனங்களினால் பரிபாலனம் செய்யப்படும் வீதிகள், குடிநீர் விநியோகம்,மின்சாரம், தொலைத்தொடர்பு, விளையாட்டு மைதானங்கள்,பாடசாலை, வைத்தியசாலை, திறன் அபிவிருத்தி கல்வி நிறுவனங்கள், நகர பல்கலைக்கழகங்கள், காணி உரித்து, வங்கி மற்றும் நிதி வசதிகள், சந்தை மற்றும் களஞ்சியசாலை, உட்கட்டமைக்கு ஆகிய அபிவிருத்தி செயற்திட்டங்களை துரிதப்படுத்தல்.
தேசிய மற்றும் சர்வதேச நிதியத்தின் கீழ் செயற்படுகின்ற கடவத்தை- மீரிகம, பொதுஹார- கடுகஸ்தொட, குருநாகல்-தம்புள்ளை, கஹதுடுவ- இங்கிரிய- ருவன்புர, துறைமுக உள்நுழை வீதி, மற்றும் அத்துருகிரிய அதிவேக நெடுஞ்சாலை, மொரட்டுவ தொடக்கம் கடற்கரை வீதி (மெரின் ட்றய்வ்), சூரிய மின்னுற்பத்தி நிலையம் (சியம்பலாண்டுவ),நீர்மின்னுற்பத்தி செயற்திட்டம்( மொரகொல்ல-பொடிலன்ட்),குபுக்கன் நதி, மினிப்பே கால்வாய்,உமா ஓயா சுரங்க பாதையின் இறுதி கட்டம், வடமத்திய ஆறு, தல்பிடிகல, ஜின்- நில்வளா கங்கை,மெதுரு ஓயா, தென்பகுதி, வத்தேகெதர குளம், வயம்ப பெரு ஆறு, கீழ் மல்வத்து ஓயா, அத்தனகல நீர்கொழும்பு பகுதி,கொழும்பு மற்றும் சன நெரிசல் அதிகம் உள்ள பகுதியை அண்மித்த 50 ஆயிரம் வீடமைப்பு திட்டம் ஆகிய அபிவிருத்தி செயற்திட்டங்கள், காலி, குருநாகல், திகன, நுவரெலியா,தம்புள்ள, ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டத்தை உரிய காலத்தில் நிறைவு செய்தல், அதற்கான மேற்பார்வைகளை முன்னெடுத்தல்,
சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் வாழும் பகுதிகளில் தங்குமிடம் மற்றும் சுகாதார தேவைகளை உறுதிப்படுத்தல், இப்பிரதேசங்களில் மரகறி, பழங்கள்,தென்னை, உள்ளிட்டவற்றை பயிரிட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல்,
பிரதேச செயலாளர் பிரிவுகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் கண்காணிப்பு பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மேற்பார்வை செய்தல். அத்துடன் செயற்திட்ட முகாமைத்துவம், மற்றும் கண்காணிப்பு திணைக்களம் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM