இஸ்லாமிக் எமிரேட் அப்கானிஸ்தான் - ஆப்கானிஸ்த்தானின் பெயரை மாற்றிய தலிபான்கள்

Published By: Gayathri

17 Aug, 2021 | 05:32 PM
image

குமார் சுகுணா

ஆப்­கா­னிஸ்­தானை கைப்­பற்­றி­யுள்ள தலி­பான்கள் இஸ்­லாமிக் அமீ­ரகம் ஆப்கான் என்று ஆப்­கா­னிஸ்­தானை பிர­க­ட­னப்­ப­டுத்­தி உள்ளனர்

அமெ­ரிக்க படைகள் வெளி­யே­றி­ய­தும் தலி­பான்கள் மிக விரை­வாக ஆப்­கா­னிஸ்­தானின் பெரும்­பா­லான பகு­தி­களைக் கைப்­பற்­றினர். 

ந்தூஸ், தலுகான், நிம்ருஸ், செபர்கான், சாரஞ், சமங்கன், புல்-­இ-­கும்ரி, தக்கார் உட்­பட 10 மாகா­ணங்­களின் தலை­ந­க­ரங்­களை கைப்­பற்­றிய தலிபான் அமைப்­பினர் அதனை தொடர்ந்து கந்­த­காரை கைப்­பற்­றி­னர். 

ஆப்­கா­னிஸ்தான் தலை­ந­க­ரான காபூ­லையும் தலி­பான்கள் கைப்­பற்­றினர். அதன்­மூலம், ஆப்­கா­னிஸ்தான், தலி­பான்­களின் கட்­டுக்குள் அதி­கா­ரப்­பூர்­வ­மாக சென்றமை உறு­தி­யா­னது. சுமார், 20 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு ஆப்­கா­னிஸ்­தானை தலி­பான்கள் மீண்டும் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

ஆப்­கா­னிஸ்­தானின் தலை­நகர் காபுலை தலிபான் அமைப்­பினர் கைப்­பற்­றிய நிலையில் அந்­நாட்டின் ஜனா­தி­பதி பத­வியை இரா­ஜி­னாமா செய்த அஷ்ரப் கானி தஜி­கிஸ்­தா­னுக்கு தப்­பி­யோ­டி­யுள்­ளார். 

அவர் பெரு­ம­ள­வான பணத்­தோடு தப்­பி­யுள்­ள­தா­க சர்­வ­தேச ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ள­ன. காபூல் நக­ருக்குள் தலி­பான்கள் வந்­து­விட்­டதை உறுதி செய்த ஜனா­தி­பதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளி­யேறி தஜி­கிஸ்­தானில் தஞ்­ச­ம­டைந்­துள்­ள­தாகத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

காபூல் நக­ருக்குள் தலி­பான்கள் வந்­து­விட்­ட­தை­ய­டுத்து, நேற்­று­முன்­தினம்  இர­வு­முதல் காபூல் நக­ருக்கு வர்த்­த­க­ரீ­தி­யான விமானப் போக்­கு­வ­ரத்து நிறுத்­தப்­பட்­டது. மேலும், காபூலில் வசித்­து­வரும் அமெ­ரிக்க மக்கள் மிக விரை­வாக பாது­காப்­பான இடங்­க­ளுக்குச் சென்று அங்­கி­ருந்து வெளி­யே­று­மாறும் அமெ­ரிக்கா கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

கடந்த இரு வாரத்தில் மட்டும் தலி­பான்கள் 13 மாகா­ணங்­களை தங்கள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­துள்­ளனர். ஜனா­தி­பதி மாளி­கைக்குள் தலிபான் தீவி­ர­வா­திகள் நுழைந்து, அதைக் கைப்­பற்­றி­விட்­ட­தாகத் தெரி­வித்­துள்­ளனர்.

இந்­நி­லை­யில், அஷ்ரப் கானி தனது பேஸ்புக் தளத்தில் பதி­விட்ட கருத்தில்,

 “ இப்­போ­தி­ருந்து ஆப்­கா­னிஸ்­தா­னுக்கும், மக்­க­ளுக்கும் தலி­பான்­கள்தான் பொறுப்பு. மக்­களின் மரி­யாதை, சொத்து, பாது­காப்பு அனைத்­துக்கும் தலி­பான்கள் பொறுப்­பேற்க வேண்டும். ஆயு­தங்கள் ஏந்­திய தலி­பான்கள் அல்­லது 20 ஆண்­டு­காலம் என் உயிரைக் காப்­பாற்­றிய அன்­புக்­கு­ரிய தேசத்தை விட்டுச் செல்­வதா என்ற ஊச­லாட்டம் இருந்­தது. ஆனால், தலிபான் தீவி­ர­வா­திகள் கத்­தியின், துப்­பாக்கி முனையில் நாட்டை வைத்­துள்­ளார்கள். அவர்­களால் நாட்டு மக்­களின் மனதை வெல்ல முடி­யாது.

நான் வெளி­யே­றா­விட்டால், ஏரா­ள­மான மக்கள் கொல்­லப்­ப­டு­வார்கள், காபூல் நகரம் சின்­னாப்பின்ன­மாகும், மிகப்­பெ­ரிய மனி­தப்­பே­ர­ழிவு நிகழும், 60 இலட்சம் மக்கள் வாழும் நகரம் இரத்­தக்­க­ள­றி­யாகும். காபூல் நகரை இரத்­தக்­க­ள­ரி­யாக்க விரும்­ப­வில்லை” எனத் தெரி­வித்­துள்ளார்.

இதற்­கி­டையே ஆப்­கா­னிஸ்தான் முன்னாள் ஜனா­தி­பதி அப்­துல்லா  காணொ­ளி­யில் கூறு­கையில் 

“இது­போன்ற கடி­ன­மான நேரத்தில் ஆப்­கா­னிஸ்­தானை விட்டு அஷ்ரப் கானி சென்­றி­ருக்கக் கூடாது. அவ­ருக்­கு­ க­ட­வுள்தான் நம்­பிக்கை அளிக்க வேண்டும். இந்த கடி­ன­மான இரவும் பகலும் கடக்­கட்டும். மக்­க­ளுக்கு அமை­தி­யான நாட்கள் கிடைக்­கட்டும்” எனத் தெரி­வித்­துள்ளார்.

ஆப்­கா­னிஸ்­தானை தலி­பான்கள் கைப்­பற்­றி­யுள்ள நிலையில் உலக நாடுகள் பலவும் காபூலில் இருந்த தங்­க­ளது தூத­ர­கத்தை மூடி­யுள்­ளனர். 

ஆப்­கா­னிஸ்­தா­னி­லுள்ள தங்கள் நாட்டு பிர­தி­நி­தி­களை நாட்­டுக்கு கொண்டு வரும் முயற்­சியில் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளனர்.

காபூலில் உள்ள சர்­வ­தேச விமான நிலை­யம் தொடர்ந்து செயல்­ப­டு­வதை நேட்டோ படை­யினர் உறுதி செய்­கின்­றனர். அதன்­மூலம், மக்கள் ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து வெளி­யே­று­வதை உறுதி செய்­கி­றது.

ஓரிரு தினங்­களில் ஆப்­கா­னிஸ்­தானின் அதி­கா­ரத்தை தலி­பான்கள் கையில் எடுப்­பார்கள் என்று தெரி­கி­றது. ஆப்­கா­னிஸ்தான் இஸ்­லாமிக் அமீ­ரகம் என்று என்று பிர­க­ட­னப்­ப­டுத்­துவோம் என்று தலி­பான்கள் தெரி­வித்­துள்­ளனர்.

கைகளில் துப்­பாக்­கி­களை ஏந்­தி­ய­படி ஆப்­கா­னிஸ்தான் தலை­நகர் காபூலில் இருக்கும் ஜனா­தி­பதி மாளி­கையில் கூட்­ட­மாக தலிபான் வீரர்கள் அமர்ந்­தி­ருக்கும் புகைப்­படம், வெளி­யா­கி­யுள்­ளது.

20 ஆண்­டு­க­ளுக்கு முன்பு அமெ­ரிக்கப் படை­களால் ஆட்­சி­யி­லி­ருந்து விரட்­டப்­பட்ட தலி­பான்கள், வெறும் இரு­பதே நாட்­களில் மீண்டும் தேசத்தைக் கைப்­பற்­றி­விட்­டனர்.

தலை­நகர் காபூலின் எல்­லையில் தலி­பான்கள் தடம் பதித்த விஷயம் அறிந்­ததும், பல நாடு­களின் தூத­ர­கங்கள் பதற்­ற­மா­கி­விட்­டன. 

அமெ­ரிக்கா, பிரிட்டன், இந்­தியா என வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து விமா­னங்கள் பறந்­து­வந்து தங்கள் தேசத்­த­வ­ரையும் தூத­ரக அதி­கா­ரி­க­ளையும் மீட்டுச் சென்­றன.

ஆயினும் நேற்­று ­வி­மான நிலை­யத்தில் தலி­பான்கள் நடத்­திய துப்­பாக்­கிச்­சூட்டில் 5பேர் உயி­ரி­ழந்­த­தோடு காபூல் விமான நிலை­யம் மூடப்­பட்­ட நிலையில் மீண்டும் திறக்கப்பட்டது. 

அத்­தோடு அமெ­ரிக்க விமானம் ஒன்றில் தப்பி செல்ல விமா­னத்தில் மேற்­ப­ரப்பில் ஏறிச்­சென்றவர்­களில் மூவர் பாதி­வ­ழி­யி­லேயே விழுந்து உயி­ரி­ழந்­தனர்.

அமெ­ரிக்கா, பிரிட்டன் உள்­ளிட்ட நாடு­களில் அதி­ந­வீன போர்க்­க­ரு­விகள், சக்தி வாய்ந்த போர் விமா­னங்கள் இத்­த­னையும் இருந்தும் வெறும் 75 ஆயிரம் பேர் கொண்ட தலிபான் படையை வீழ்த்த முடி­யாமல் சமா­தானம் செய்­து­கொண்டு அமெ­ரிக்கா பின்­வாங்­கி­யி­ருக்­கி­றது.

''ஆப்­கா­னிஸ்தான் மண்ணில் அல்-­கொய்தா அமைப்­புக்கோ, ஐ.எஸ் தீவி­ர­வா­தி­க­ளுக்கோ புக­லிடம் தர மாட்டோம்'' என தாலிபன் அமைப்பு கொடுத்த உறு­தி­மொ­ழியை மட்டும் எடுத்­துக்­கொண்டு அமெ­ரிக்கப் படைகள் வெளி­யே­றி­யுள்­ள­தாக விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது.

முன்­பை­விட பலம் பெற்று ஆப்­கா­னிஸ்­தானின் அதி­கா­ரத்தை தலி­பான்கள் கைப்­பற்­றி­யுள்­ளனர். 'இஸ்­லாமிக் எமிரேட்ஸ் ஒப் ஆப்­கா­னிஸ்தான்' என்று நாட்­டுக்குப் பெயரும் கொடுத்­து­விட்­டனர். 

ஏற்­க­னவே தலி­பான்­களின் ஆட்­சியில் ஆண்­க­ளுக்கு தாடியைக் கட்­டா­ய­மாக்கி, பெண் கல்­வியை ஒழித்து, பெண்கள் பணிக்குச் செல்­வதை மறுத்து, பொழு­து­போக்­கு­களைத் தடை செய்து நாட்டை கடும் கட்­டுப்­பா­டோடு ஆட்சி செய்யப்­பட்­டமை உல­க­ளவில் கடும் விமர்­ச­னங்­களை ஏற்­ப­டுத்­தி­­ய­து.

மீண்டும் மிக கடு­மை­யான ஆட்­சியை வழங்­கி­வி­டுவர் என்ற அச்சம் அந்த நாட்டு மக்­க­ளுக்கு உள்­ளதால் நாட்டை விட்டு வெளி­யேற முயற்­சித்து வரு­கின்­றனர்.

இப்­போது தலிபான்  தலை­வ­ராக இருப்­பவர், மவ்­லவி ஹிபத்­துல்லா அகுந்த்­ஸடா ஆவார்.  இஸ்­லாமிக் எமிரேட் ஒப் ஆப்­கா­னிஸ்­தானின் தலைவர் மவ்­லவி ஹிபத்­துல்லா அகுந்த்­ஸடா என்­பது உறு­தி­யாகி விட்ட நிலையில், அவ­ருக்குக் கீழ் ஆப்­கானை நிர்­வ­கிக்க 3 துணைத் தலை­வர்கள் நிய­மிக்­கப்­ப­டு­வார்கள் என்று கூறப்­ப­டு­கி­றது.

உல­க­நா­டுகள் தலி­பான்­களை கண்டு அஞ்­சி­னாலும் தலிபானுடன் நட்புறவை கொள்ள போவ­தாக சீனா அறிவித்துள்­ளது. 

தொடர்ந்து பாகிஸ்­தானும் ஆத­ர­வான மன வெளிப்­பாட்டை வெளி­யிட்­டுள்­ளது. ரஷ்யா பேச்­சு­வார்த்­தை நடத்த உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. ஆயினும் ஆப்­கா­னி­லி­ருந்து தப்பி வெளி­யே­றவே அந்­நாட்டு மக்கள் முயற்­சித்து வரு­கின்­றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04