கொழும்பில் இப்படியும் நிலை ! மூடுவதா ? இல்லையா ?

17 Aug, 2021 | 04:22 PM
image

நாட்டில் கொவிட் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், சில நகரங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், இதுவரை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல நகரங்களில் இவ்வாறு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந் நிலையில், தற்போது புறக்கோட்டையிலும் கெய்சர் வீதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, கொழும்பு-புறக்கோட்டை கெய்சர் வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களை 10 நாட்களுக்கு மூடுவதற்கு கெய்சர் வீதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்து துண்டுப்பிரசுரம் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு புடைவை கடை உரிமையாளர் சங்கத்தின் பொருளாளர் ராமநாதனை தொடர்பு கொண்டு கேட்டபோது, 

இவ்வாறு துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியாகியுள்ளதாகவும், அதில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையெனவும் தெரிவித்ததுடன் அது தொடர்பில் தாம் ஆராய்வதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமது சங்கம் எவ்வித முடிவுகளையும் எடுக்கவில்லையெனவும் தமது சங்க உறுப்பினர்களுக்கு இது தொடர்பில் தெளிவு படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவிவரும் நிலையில், டெல்டா திரிபின் மேலும் 3 பிறழ்வுகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான இன்று பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறு இருப்பினும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையிலம் கொழும்பு புறக்கோட்டை வர்த்த நடவடிக்கைகள் சாதாரணமாக இன்று இடம்பெற்றமை எமது அலுவலக புகைப்படப்பிடிப்பாளரின் கமெராவில் சிக்கியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22