பாராளுமன்ற சர்வகட்சி குழுவொன்றை நியமித்து தீர்மானங்கள் எடுக்க வேண்டும்: திஸ்ஸ விதாரண ஆலோசனை

By J.G.Stephan

17 Aug, 2021 | 04:02 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )
நாட்டில் மோசமான கொவிட் வைரஸ் பரவல் நிலையொன்று காணப்படுகின்ற நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையில் கொவிட் கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்து உடனடி தீர்மானங்களை எடுக்க வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண  சபையில் தெரிவித்தார்.

 அவர் மேலும் கூறுகையில், நாட்டில் மோசமான வைரஸ் தொற்று பரவிக்கொண்டுள்ளது. இந்நிலையில் தனித்தனியாக விமர்சித்துக்கொண்டு இருக்காது, எமக்குள் மோதிக்கொண்டிருக்காது, அரசியல் கட்சிகளுக்குள் இடையில் கொவிட் கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்து சுகாதார அமைச்சருடன் இணைந்து செயற்பட்டால் ஆரோக்கியமானதாக அமையும். 

டெல்டா புதிய வைரஸ் பரவலின் பின்னர் நாடு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்டு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நபரில் இருந்து இன்னொரு நபருக்கு பரவும் தன்மையில் இந்த வைரஸ் உள்ளது. எனவே வெறுமனே தெளிவு படுத்தல்களை முன்னெடுப்பதை விடவும் சகல மாவட்டங்களிலும் ஒரு கற்கை முறையொன்றை உருவாக்க வேண்டும். கொவிட் செயலணி மூலமாகவேணும் இதனை முன்னெடுக்க வேண்டும். அப்போது தான் வைரஸ் குறித்து மக்களுக்கு நிலைமைகள் விளங்கும். தற்போது பாரிய சவாலொன்றை நாம் எதிர்கொண்டுள்ளோம். இதில் சகலரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கைகளை கழுவி தொடர்ச்சியாக எமது சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வைரஸ் இப்போதே சமூக பரவலாகிவிட்டது, இதில் ஒவ்வொரு தனி நபரும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டால் மட்டுமே எம்மால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right