Published by T. Saranya on 2021-08-18 12:42:21
தலிபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் என்ற செய்திகள் வெளியானதுமே, உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தமது நாட்டுத் தூதரகங்களைக் அங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்தன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியிலும் ஒரு வித அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், அங்கிருந்து அந்நாட்டு மக்கள் பாகிஸ்தான் போன்ற அயல் நாடுகளுக்கு தப்பிச் சென்று தஞ்சமடைவதாக செய்திகள் வெளியாகின்றன.
இதையடுத்து தலிபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க சட்டப்படி தலிபான் அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை பேஸ்புக் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.