ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்காக்கும் படைப்பிரிவுக்கு இலங்கை வழங்கும் ஆதரவு வரவேற்கத்தக்கது என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இடம்பெற்ற அமைதிக்காக்கும் பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், சீனா, மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைத்திக்காக்கும் படைப்பிரிவுக்கு தங்களது முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றமை வரவேற்கத்தக்கது.

இந்நிலையில் நாடுகளில் உள்ள பாதுகாப்பு படைகள் மற்றும் பொலிஸ் ஆகியவற்றுடன் அமைத்திக்காக்கும் படைப்பிரிவு இணைந்து செயற்பட்டுவரும் நிலையில் அதனை மேம்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.