கடவுளிடம் பொறுப்பை ஒப்படைப்பதாகக் கூறிய கெஹெலியவின் நியமனம் பொறுத்தமற்றது: ஐக்கிய மக்கள் சக்தி

Published By: J.G.Stephan

17 Aug, 2021 | 01:45 PM
image

(எம்.மனோசித்ரா)
பேராசிரியர் திஸ்ஸ விதாரண, விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, வைத்தியர் ரமேஷ் பத்திரண, கலாநிதி சீதா அரம்பேபொல மற்றும் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகிய சுகாதாரத்துறையில் நிபுணத்துவம் உடையவர்கள் சுகாதார அமைச்சில் உள்வாங்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் மக்களை பாதுகாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைப்பதாகக் கூறிய கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை பொறுத்தமற்றதாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டு மக்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் முழுமையாக தோல்வியடைந்துள்ளது. முதலாவது அலையின் போது நாட்டை முடக்குமாறு கோரிய போது 28 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமைக்காக நாட்டை முடக்க முடியாது என்று கூறிய அரசாங்கம், தற்போது மரணங்களின் எண்ணிக்கை 6000 ஐ கடந்துள்ள நிலையிலும் அதே நிலைப்பாட்டிலேயே உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முகப்புத்தகம் பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி பத்திரிகைகளைக் கூட பார்ப்பதில்லை. ஆளுந்தரப்பில் கட்சிக்குள்ளும் ஒற்றுமை இல்லை. அரசாங்கத்திற்குள்ளும் ஒற்றுமை இல்லை. தற்போது அமைச்சரவையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் பயனற்றவை.

இரவு நேர ஊரடங்கு அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பொறுந்துமே தவிர இலங்கைக்கு பொறுத்தமானதல்ல என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:07:39
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31