இலங்கை மற்றும் அவுஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்­டா­வதும் கடை­சி­யு­மான இரு­ப­துக்கு 20 போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரே­ம­தாச கிரிக்கெட் அரங்கில் நடை­பெ­ற­வுள்­ளது.

இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணி மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வைட் வொஷ் தோல்­வியை சந்­தித்­தி­ருந்த நிலையில் ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4–1 என்ற அடிப்­ப­டையில் வென்­றது.

அதைத் தொடர்ந்து கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற முத­லா­வது இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்­டியில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ரான மெக்ஸ்வெல் ருத்ர தாண்­ட­வ­மாட இலங்கை அணியின் சாத­னை­யையும் முறி­ய­டித்து அபார வெற்­றி­யீட்­டி­யது ஆஸி.

இந்தப் போட்­டியில் இலங்கை அணி அனைத்து விதத்­திலும் சிறப்­பாக செயற்­பட தவ­றி­விட்­டது என்றே சொல்­லலாம். இந்தப் போட்­டியில் இலங்கை அணியின் பந்து வீச்சு படு­மோ­ச­மாக அமைந்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் இந்தத் தொடரின் கடைசி போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரே­ம­தாச கிரிக்கெட் அரங்கில் இரவு 7 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இதில் அவுஸ்­தி­ரே­லிய வீர­ரான மெக்ஸ்­வெல்லை இலங்கை அணி கட்­டுப்­ப­டுத்­தி­யாக வேண்டும். பந்தை எந்த திசையில் பிட்ச் செய்­தாலும் அடித்­தாடும் தன்மை கொண்ட மெக்ஸ்­வெல்­லுக்கு இலங்கை அணியின் பந்­து­வீச்­சா­ளர்கள் எப்­படி பந்து வீசப்­போ­கி­றார்கள் என்­பதை இன்­றைய போட்­டியில் நாம் பொறுத்­தி­ருந்து பார்ப்போம்.

முத­லா­வது இரு­ப­துக்கு 20 போட்­டியில் இலங்கை அணி நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்று, ஆஸி.க்கு முதலில் துடுப்­பெ­டுத்­தாடும் வாய்ப்பை கொடுத்த முடிவு தவ­றாகும் என்று விமர்­சிக்­கப்­ப­ட்­டது.

அதேபோல் பந்­து­வீச்­சாளர்கள் இந்தப் போட்­டியில் ஏகத்­திற்கு புல்­டொஸ்­களை வீசி அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு இன்னும் இல­கு­வாக ஓட்­டங்­களைப் பெற வழி அமைத்துக் கொடுத்து விட்­டனர்.

இந்தத் தவறுகளை நிவர்த்தி செய்து இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடி இருபதுக்கு 20 தொடரை இலங்கை அணி சமநிலையில் முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.