ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து நாட்டின் தற்போதைய கொவிட்-19 நிலைமைகள் குறித்து விவாதிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்திய முன்னாள் பிரதமர், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை அரசியல் தலைவர்கள் முன்வைக்கலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் சந்திப்புக்கான கோரிக்கைக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ சாதகமாக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

கொவிட் -19 உயிரிழப்புகளை குறைத்தல் மற்றும் தொற்று ஏற்படுத்துவதை முழுமையாக கட்டுப்படுத்தலுக்காக எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. 

கொவிட் பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய விடாது மீட்டெடுத்தல் போன்றவை குறித்து அவசரமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளார்.  

இதனைமையப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சி கடந்த வாரத்தில் வெளியிட்ட திட்ட வரைபினை  செயற்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.