2021 ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானில் ஒக்டோபர் 17 முதல் நடைபெறவுள்ளது.
இறுதிப் போட்டி நவம்பர் 14 அன்று துபாயில் நடைபெறும்.
இதில் சூப்பர் 12 சுற்றின் குழு 2 இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டம் துபாயில் ஒக்டோபர் 24 ஆம் திகதி அரங்கேறவுள்ளது.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.
இறுதியாக இவ்விரு அணிகளும் 2019 இல் ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் ஒன்றையொன்று எதிர்த்து ஆடியது.
ஐ.சி.சி. செவ்வாய்க்கிழமை 2021 டி-20 உலகக் கிண்ணத்துக்கான அட்டவணையை அறிவித்ததால் போட்களுக்கான திகதிகள் அனைத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல் சுற்று ஆட்டம் ஒக்டோபர் 17 அன்று ஓமானில் தொடங்குகிறது.
அன்றைய தினம் ஓமான் பப்புவா நியூ கினியாவையும், பங்களாதேஷ் ஸ்காட்லாந்தையும் எதிர்த்தாடுகிறது.
ஒக்டேபர் 18 அன்று அயர்லாந்து நெதர்லாந்தையும், இலங்கை நமிபீயாவையும் எதிர்த்தாடவுள்ளது.
இறுதிப் போட்டி நவம்பர் 14 அன்று துபாயில் நடைபெறும், நவம்பர் 15 ஓய்வு நாளாகக் குறிக்கப்பட்டுள்ளது.
முதல் சுற்று
- குழு ஏ :இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் நமீபியா
- குழு பி : பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, பப்பூவா நியூகினியா மற்றும் ஓமான்
(ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறும்)
சூப்பர் 12 சுற்று
- குழு 1: இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள், A1 மற்றும் B2.
- குழு 2: இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், A2 மற்றும் B1.
(ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதலிரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM