bestweb

பிரபல தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்த கண்ணன் காலமானார்..!

Published By: Digital Desk 8

17 Aug, 2021 | 10:16 AM
image

பிரபல தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்த கண்ணன் காலமானார். 

இவர், நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவராவார். தமிழில் பிரபலமான சிந்துபாத் சீரியலில் நாயகனாக நடித்த இவர், சரோஜா, அதிசய உலகம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த கண்ணன், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையேயும், ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், ஆனந்த கண்ணன் மறைவுக்கு, இரங்கல் தெரிவித்து இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில், “சிறந்த நண்பன், சிறந்த மனிதன் தற்போது இல்லை. ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right