திருகோணமலை - சம்பூர் – நீலாங்கேணி பகுதியில் 6 வயது சிறுமியின் மரணத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 16 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலாங்கேணி பிரதேசத்தில் நேற்று 6 வயது சிறுமியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் அதே பிரதேசத்தினைச் சேர்ந்த ஜெகதிஸ்வரன் அஜந்தா என்ற 6 வயது சிறுமியென அடையாளம் காணப்பட்டுள்ளது. 

மேலும், குறித்த சிறுமி நேற்று காலை 9.00 மணியளவில் வீட்டிலிருந்த காணாமல் போயுள்ளதாக தெரியவந்ததையடுத்து, தேடுதலில் ஈடுபட்ட கிராம மக்கள் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். 

சிறுமி துஷ்பிரயோகம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுவதோடு, சந்தேகநபரான இளைஞரும் தலைமறைவாகிய நிலையில் சம்பூர் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்நனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 16 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.