இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலப் பரப்பு மற்றும் துறைமுக அதிகாரசபையின் சேவைகளை சீன நிறுவனத்துக்கு மாற்றுவதற்கான முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஜூலை 21 ஆம் திகதி அமைச்சரவையில் அதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போதைய அரசாங்கம் நாட்டின் தேசிய வளங்களை ஒவ்வொன்றாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.