கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனை பகுதியில் பூனகரி பொலிஸாரின் விசேட நடவடிக்கையில், கூலர் வானத்தில் கொண்டு செல்லப்பட்ட 1200 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை மஞ்சளை ”அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனம்” என பதாதை போடப்பட்டிருந்த கூலர் வாகனத்தில் நீர்கொழும்பில் இருந்து கௌதாரிமுனை பகுதிக்கு குறித்த  மஞ்சளை ஏற்றி செல்ல முற்பட்ட போது பூனகரி பொலிஸாரால் மஞ்சள் மற்றும் வாகனத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.