சுபத்ரா

“விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறப்பாக செயற்பட்டவர்கள், வெற்றிகளைக் குவித்தவர்கள் என்று கொண்டாடப்பட்டவர்கள் எல்லோருமே- தற்போதைய ஆட்சியில் உயர் பதவிகளை வகித்தாலும் இப்போது சறுக்கு நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்”

செயலணி -1 இன் (Task Force-1) மூலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றிகளைக் குவித்த இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு, கொரோனா தடுப்பு செயலணி பெரும் சவாலாக மாறியிருக்கிறது.

விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் ஜெனரல் சவேந்திர சில்வாவின் போர்த்திட்டத்தின் முதுகெலும்பாக இருந்தது, இராணுவத்தின் 58 ஆவது டிவிசன் தான்.

சிலாவத்துறையில் தொடங்கி மன்னாரின் கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றி, கிளிநொச்சியின் கரையோரப் பிரதேசங்கள் வழியாக, பரந்தனுக்குள் ஊடறுத்து, புதுக்குடியிருப்பு, இரட்டைவாய்க்கால் வழியாக முள்ளிவாய்க்கால் நோக்கி முன்னேறியது இந்த டிவிசன் தான்.

இறுதிப் போரின் தொடக்கம் முதல் முடிவு வரை பிரதான பாத்திரத்தை வகித்த இராணுவத்தின் டிவிசன்களில் இதுவே பிரதானமானது.

இந்த டிவிசன் மட்டும், இறுதிக்கட்டப் போரில், அதாவது 2007 செப்ரெம்பர் முதலாம் திகதி தொடக்கம், 2009 மே 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 30 அதிகாரிகள் மற்றும் 1353 படையினரை இழந்துள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் கூறுகின்றன.

2009ஆம் ஆண்டு ஜனவரியில் பரந்தனை கைப்பற்றிய பின்னர் தான், 58 ஆவது டிவிசன் அதிகாரபூர்வமாக உருவாக்கப்பட்டது.

அதற்கு முன்னர் செயலணி -1 (Task Force -1) என்ற பெயரிலேயே அது செயற்பட்டு வந்தது.

இறுதிக்கட்டப் போரின் போது, இவ்வாறான 8 செயலணிகள் உருவாக்கப்பட்டிருந்தன.

திருக்கேதீஸ்வரம் பகுதியில், செயலணி-1 இன் முதலாவது கட்டளை அதிகாரியாக இருந்த பிரிகேடியர் சாஜி கல்லகேக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார் பிரிகேடியர் சவேந்திர சில்வா.

அங்கு தொடங்கிய அவரது பயணம், முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து கொண்டிருந்தது.

ராஜபக்ஷ அரசாங்கத்தின் தீவிர விசுவாசியாக இருந்த காரணத்தினால், அவர் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், உயர்பதவிகளை விரைவாகவே எட்டியிருந்தார்.

தற்போதைய அரசாங்கத்தில் அவர் அசைக்க முடியாத ஒருவராக மாறியிருக்கிறார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-15#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.