நாட்டை முடக்க வேண்டாம்..! என்பதே பெரும்பான்மையோரின் நிலைப்பாடு: அஜித் நிவாட் கப்ரால்

Published By: J.G.Stephan

16 Aug, 2021 | 04:18 PM
image

(ஆர்.யசி)
நாட்டை முடக்க வேண்டும்  என  சுகாதார தரப்பினர் கூறினாலும்,  நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நபர்கள் நாட்டை முடக்காது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். நாட்டை முடக்க வேண்டாம் என்பதே பெரும்பான்மையானவர்களின் நிலைப்பாடாக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நாடு முடக்கப்பட்டாலும், முடக்கப்படாது போனாலும் மக்கள் கண்டிப்பாக  பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் உள்ளன. நாட்டை முடக்கித்தான் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஏன் எதிர்பார்க்க வேண்டும். நாட்டில் முன்னெடுக்க வேண்டிய அத்தியாவசிய தேவைகள் உள்ளன. மக்களின் செயற்பாடுகளை முடக்கினாலும் நாட்டை முடக்கினாலும் மக்களுக்கு கொடுக்க வேண்டிய அத்தியாவசிய சேவைகள் இயங்கியாக வேண்டும். ஆகவே அதற்கு இடமளித்து மக்கள் நிலைமைகளை உணர்ந்து நடந்துகொண்டால் எந்த பிரச்சினையும் வரப்போவதில்லை. 

கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் நிலைமை குறித்து சகலருக்கும் புதிதாக கூறத் தேவையில்லை. அவ்வாறு இருக்கையில் மக்கள் ஏன் அவற்றை உணர்ந்து செயற்படக்கூடாது. சகலதையும் முடக்கிவிட்டு வீடுகளில் இருந்தால் அப்போதும் மக்கள் எம்மையே குறை கூறப்போகின்றனர். மக்களின் பாதுகாப்பு அவசியமான ஒன்றாகும். சுகாதார வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டும்,  அதேபோல் பொருளாதாரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த சவால்களை வெற்றிகொள்ள சகலரும் பொறுப்புடன் இணைந்து செயற்பட வேண்டும்.

நாட்டை முடக்க வேண்டும் என சுகாதார தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் நாட்டை முடக்க வேண்டாம் என வியாபார தரப்பினர், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதி இறக்குமதி துறையினர், மத்திய தரப்பினர் கூறுகின்றனர். சுகாதார வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி நாட்டை முடக்காது செயற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர். ஆகவே அவர்களின் நிலைமைகளையும் நாம் விளங்கிக்கொள்ளள வேண்டும். வெறுமனே  சுகாதார தரப்பினர் கூறுவதற்கு அமைய நாட்டை நினைத்த நேரத்தில் முடக்கிவிட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது.  நாம் இன்று தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டை வேகமாக முன்னெடுத்து வருகின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58