உதயங்க வீரதுங்கவுக்கு   சாதாரண  கடவுச்சீட்டே  வழங்கப்பட்டுள்ளது 

Published By: Ponmalar

08 Sep, 2016 | 09:04 PM
image

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள், தூதுவர் உதயங்க வீரதுங்க, அவரது மனைவி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள்   இரத்துச்செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக  சாதாரண வெளிநாட்டு கடவுசீட்டுகளே  வழங்கப்பட்டுள்ளன என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற  வாய்மூல  விடைக்கான கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  அதாவது  ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக செயற்பட்ட உதயங்க கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கினார் என  உக்ரைன் அரசு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. மிக் விமான கொடுக்கல்  வாங்கல் பற்றியும் விசாரணை நடந்துவருகிறது. ரஷ்ய தூதரகத்தில் பணியாற்றிய இலங்கை இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்தும் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்றுவருகிறது. இவ்வாறானதொரு நிலையிலேயே அவருக்கு  சாதாரணக் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் வெளிவிவகார அமைச்சு  இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. அவர் தற்போது முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவுடன் வெளிநாடுகளுக்கு சென்றுவருகிறார். வெளிவிவகார அமைச்சும்இ குடிவரவு-குடியகல்வு கட்டுபாட்டாளரும்  அனுமதி வழங்கியுள்ளனர்.

இவ்வாறிருக்கையில்  உதயங்க ஒரு பாரிய குற்றவாளி. அவரை தேடிவருகிறோம் என அரசாங்கம் தொடர்ச்சியாக  கூறி வருகின்றது. கொலை சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் ஒருவராகவும் கொடுக்கல் வாங்கலில் மோசடி செய்தார் எனக் கூறப்படும் ஒருவராகவும் இருக்கும் உதயங்கவுக்கு  எந்த அடிப்படையில் கடவுச்சீட்டு வழங்கப்பட்டது  எனக் கேள்வியெழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்த அமைச்சர் நாவின்ன, நான் அமைச்சு  பதவியை ஏற்க முன்னர்தான் இப்படி நடந்துள்ளது. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச  பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன்  இராஜதந்திர கடவுச்சீட்டும் இரத்துசெய்யப்பட்டுள்ளது  உதயங்கவினதும், அவரது மனைவியினதும் இராஜதந்திர  கடவுள்சீட்டுகள் 2015 மார்ச் மாதம் 6 ஆம் திகதி இரத்துச்செய்யப்பட்டன. அதே தினத்தில் இருவருக்கும் சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. இதற்காக வெளிவிவகார அமைச்சினால்இ குடிவரவு-குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தது.சாதாரண வெளிநாட்டுக் கடவுச்சீட்டை பெறுவதற்கு உதயங்க இலங்கைவரவில்லை. அவரது மனைவியே 2015 மார்ச் 9 ஆம் திகதி அவற்றைப் பெற்றுக்கொண்டார் அவருக்கு சாதாரண கடவுச்சீட்டு வழங்கப்படுவது  வழமை அது தொடர்பில் நீதிமன்றம் எந்தவொரு தடையையும்  விதிக்கவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை கைதிக்கு புகையிலைகளை கொண்டு சென்றவர்...

2025-01-22 13:03:48
news-image

முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை...

2025-01-22 12:55:09
news-image

இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின்...

2025-01-22 12:58:57
news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35
news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13
news-image

மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை பிரதான...

2025-01-22 12:41:05
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நால்வர்...

2025-01-22 11:43:15
news-image

வடக்கில் கடந்த வருடம் 34 படுகொலைகள்...

2025-01-22 11:46:04
news-image

ரயில் மோதி நபரொருவர் காயம்!

2025-01-22 12:01:49
news-image

யாழில் காய்ச்சலால் 4 வயது சிறுமி...

2025-01-22 11:08:55