களுவாஞ்சிக்குடி பகுதியில் கைக்குண்டுடன் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது மதிக்க தக்க ஆண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணம் செய்யும் போதே இன்று காலை 10.30 மணியளவில் விசேட அதிரடி படையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும், அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும், கைப்பற்றப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.