மட்டக்களப்பு சென் செபஸ்தியன் தேவாலயத்தில் பெண் ஒருவருக்கு ஞானஸ்தானம் செய்வதற்கு சுகாதார துறையினர் அனுமதி வழங்காத நிலையில், சுகாதார விதிமுறைகளை மீறி ஞானஸ்தானம் நடத்தியதில் மன்னாரில் இருந்து நிகழ்வில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த நிகழ்வை நடத்திய தேவாலய வணபிதா ஒருவர் உட்பட 9 பேரை இன்று திங்கட்கிழமை (16) முதல் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கோட்டமுனை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
குறித்த தேவாலயத்தில் நகர்ப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தேவாலயத்தில் ஞானஸ்தானம் செய்வதற்காக பெண்ணின் பெற்றோர் பொதுசுகாதார பரிசோதகர்களிடம் அனுமதி கோரியபோது தற்போதைய சுகாதார அறிவித்தல் காரணமாக எந்த நிகழ்வும் செய்யமுடியாது என அந்த நிகழ்வுக்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்து அனுமதி வழங்கப்படாத நிலையில் சுகாதார துறையினரின் சட்டத்தை மீறி நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த தேவாலயத்தில் உறவினர்களுடன் பலருடன் இந்த ஞானஸ்தான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த ஞானஸ்தான நிகழ்வில் பங்கேற்பதற்கு மன்னாரில் இருந்து அவர்களது உறவினர்கள் கடந்த வாரம் வந்து தங்கியிருந்து குறித்த ஞானஸ்தான நிகழ்வில் பங்கேற்றுவிட்டு அவர்கள் மீண்டும் தமது சொந்த இடமான மன்னாருக்கு செல்வதற்கான போக்குவரத்து அனுமதி பெறுவதற்காக இன்று திங்கட்கிழமை பொது சுகாதார பரிசோதகர்களிடம் சென்ற நிலையில் அவர்களுக்கு ஆமற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவர்கள் 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டது.
இதனையடுத்து தொற்று உறுதி கண்டறியப்பட்ட இவர்களை கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் கரடியனாறு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த ஞானஸ்தான நிகழ்வை சட்டத்தை மீறி நடத்திய தேவாலய வணபிதா உட்பட ஞானஸ்தாத்தில் பங்கேற்ற 9 பேரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.