'கழுகு' படத்தை இயக்கிய இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் 'கிராமத்து நாயகன்' சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் T.D. ராஜா தயாரிக்கும் புதிய படத்தில் கதையின் நாயகனாக 'கிராமத்து நாயகன்' சசிகுமார் நடிக்கிறார்.
இந்நிறுவனம் தயாரித்திருக்கும் 'ராஜவம்சம்' என்ற படத்திற்கு பிறகு மீண்டும் சசிகுமார் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் இரண்டாவது படமிது.
இந்த படத்தை 'கழுகு', 'கழுகு 2' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சத்யசிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை ஹரிப்பிரியா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் விக்ராந்த், மதுசூதனன் நடிகை துளசி உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கிறார்கள்.
ராஜா பட்டசார்ஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கிறார். படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகியிருக்கும் 'ராஜவம்சம்', 'எம்ஜிஆர் மகன்', 'பகைவனுக்கு அருள்வாய்', 'கொம்பு வச்ச சிங்கம்டா', 'உடன்பிறப்பே' ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM