(எம்.எப்.எம்.பஸீர்)

பொலிஸ் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார். 

பொலிஸ் ஊடகப்  பிரிவு மற்றும்  பொது மக்கள் உறவுகள் பிரிவுக்கு பொறுப்பான பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ செயற்பட்டு வந்த நிலையிலேயே, அவர் பொலிச் பேச்சாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

 ஏற்கனவே பொலிஸ் தலைமையகத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக நிஹால் தல்துவ செயர்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் ஊடகப் பிரிவின்  பனிப்பாளராக நியமிக்கப்ப்ட்டார். 

இந் நிலையிலேயே அவர் தற்போது பொலிஸ்  பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.