கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால், இன்று முதல் தினமும் 64 ரயில் சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பிரதான ரயில் மார்க்கத்தில் உள்ள ரயில்கள் அம்பேபுஸ்ஸ வரையிலும், புத்தளம் மார்க்கமாக செல்லும் ரயில்கள் நீர்கொழும்பு, கொச்சிக்கடை வரையிலும், கடலோர ரயில்கள் அளுத்கம வரையிலும் சேவைகளை முன்னெடுக்கவுள்ளன.

இதேவேளை இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் தம்மிகா ஜெயசுந்தர, இன்று பிரதான ரயில் வழியாக 10 ரயில்கள், கடலோரப் பாதையில் 22 ரயில்கள் மற்றும் களனி பள்ளத்தாக்கு வழியில் எட்டு ரயில்கள் மாத்திரம் இயக்கப்படும் என்று கூறினார்.