ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசத்தின் தந்தை காலமானார்.

 அகிலவிராஜ் காரியவசத்தின் தந்தையான அல்பர்ட் காரியவசம் அவர்கள், சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இந்நிலையில் தனது 84ஆவது வயதில் இன்று(16.08.2021) காலமானார்.

வயம்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளராக செயற்பட்டு வந்த அன்னார், குளியாப்பிட்டிய பிரதேசத்தில் பிரபல வர்த்தகர் என்பதுவும் குறிப்பிடதக்கது. 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் குளியாபிட்டிய வீரம்புவ குடும்ப மயானத்தில் நாளை மாலை இடம்பெறும் என தெரியவந்துள்ளது.