நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றின் காரணமாக, மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவையானது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 12.08.2021 ஆம் திகதி முதல் 31.08.2021 வரையில் இவ்வாறு குறித்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

மேலும், குறித்த காலப்பகுதியில் காலவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு 30.09.2021 வரையில் எவ்வித அபராதமும் வசூலிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, அவசர தேவை நிமித்தம்,  www.motortraffice.wp.gov.lk என்ற இணையதளத்தின் மூலம் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.