கொரோனா தொற்றுக்குள்ளாகும் கைதிகளுக்கு சிகிச்சையளிக்க மேலும் 4 இடங்கள் தயார்

16 Aug, 2021 | 06:56 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் கைதிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக புதிதாக 4 சிகிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தல்தென, பல்லேகல, அம்பேபுஸ்ஸ மற்றும் அங்குணகொலபெலஸ்ஸ ஆகிய பகுதிகளில்  இந்த நான்கு சிகிச்சை நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் ( நிர்வாகம் ) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகும் கைதிகள் இதுவரை இயக்கச்சி மற்றும் வட்டரக்க கொரோனா  சிகிச்சை நிலையங்களுக்கே அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டிருந்தனர்.  

இந் நிலையிலேயே தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான  அதிகரிப்பு ஏற்படின், அதற்கு முகம் கொடுக்கும் வண்ணம் இந்த புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 ஏற்கனவே, சிறைச்சாலைகளில் ஏற்படும் இட நெருக்கடியை குறைத்துக்கொள்வதற்காக, சிறு குற்றங்கள் தொடர்பில் சிறையிலடைக்கப்பட்ட 14,000 கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 19 ஆயிரம் பேர் வரையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திலினி பிரியமாலி மீது பாலியல் துன்புறுத்தல்...

2022-12-08 16:00:50
news-image

சிறுநீரக விற்பனை விவகாரம் - குற்றம்சாட்டப்படும்...

2022-12-08 15:46:01
news-image

லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ள எரிவாயு சிலிண்டர்...

2022-12-08 15:31:51
news-image

முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லவும் -...

2022-12-08 15:20:04
news-image

கோட்டாபய சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு அனுமதியளித்த விவகாரம்...

2022-12-08 15:35:50
news-image

கிராஞ்சி கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய...

2022-12-08 15:21:32
news-image

பொலிஸாரை மிரட்டி, வீடியோ காட்சிகளை சமூக...

2022-12-08 14:51:03
news-image

மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி...

2022-12-08 14:58:47
news-image

கணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான...

2022-12-08 14:26:11
news-image

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு...

2022-12-08 14:19:05
news-image

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்

2022-12-08 15:50:49
news-image

வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்தின் முன்...

2022-12-08 14:29:48