நாட்டில் நாளாந்தம் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் நாளாந்தம் தற்போது 150 பேருக்கும் மேல் இறக்கும் நிலையில் நேற்றையதினம் 161 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு மற்றும் ராகம வைத்தியசாலைகளில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் சடலங்கள் தேங்கிக் கிடப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து சடலங்களை அடக்கம் செய்வதற்கான பிரேதப் பெட்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பாணத்துறை பகுதியில் பிரேதப் பெட்டிகள் உருவாக்குவது எமது அலுவலக புகைப்படப்பிடிப்பாளரின் கமெராவில் சிக்கியது.

படப்பிடிப்பு ;- ஜே.சுஜீவகுமார்